தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கற்கருவிகளை உருவாக்கிய தேய்ப்பு பள்ளங்கள் ஆவணம்

கற்கருவிகளை உருவாக்கிய தேய்ப்பு பள்ளங்கள் ஆவணம்

கற்கருவிகளை உருவாக்கிய தேய்ப்பு பள்ளங்கள் ஆவணம்


UPDATED : நவ 10, 2026 11:03 AM

ADDED : நவ 10, 2026 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 11:03 AM ADDED : நவ 10, 2026 10:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 4,000 ஆண்டுகளுக்கு முன் பாறைகளில் தேய்த்து கற்கருவிகளை உருவாக்கிய, தேய்ப்பு பள்ளங்கள் கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணைகோள்புதுார் பகுதியில் தென்பெண்ணை ஆற்று படுகையில், தொல்லியல் ஆய்வாளர் திவித் குமார் கள ஆய்வு மேற்கொண்ட போது, 4,000 ஆண்டுகளுக்கு முன், கற்கருவிகளை உருவாக்க பாறைகளில் தேய்க்கும் பள்ளங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ளார்.

தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:

புதிய கற்காலமான, 4,000 ஆண்டுகளுக்கு முன், விலங்குகளை வேட்டையாட, விவசாயம் மேற்கொள்ள, கைக்கோடாரியாக, கற்கருவிகளையே மனிதர்கள் பயன்படுத்தினர். அத்தகைய கருவிகளை உருவாக்க, 100க்கும் மேற்பட்ட தேய்ப்பு பள்ளங்களை, கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகோள்புதுார் ஆற்று படுகையில் கண்டறியப்பட்டுள்ளது.

தேய்ப்பு பள்ளங்கள், கற்கருவிகளை பாறைகளின் மேற்பரப்பில் மீண்டும், மீண்டும் தேய்த்தல், கூர்மைப்படுத்துதல் அல்லது மெருகூட்டுதலால் உருவாகும் நீளமான பள்ளங்களாகும். இவை, 6 முதல், 40 செ.மீ., நீளமும், 4 முதல், 12 செ.மீ., வரை அகலமும் கொண்டுள்ளது. நீண்டகாலமாக அம்மனிதர்கள் மேற்கொண்ட செயல்களால், பாறை மேற்பரப்புகளில் வழுவழுப்பான நீளமான பள்ளங்கள் உருவாகியிருக்கக்கூடும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us