UPDATED : ஆக 18, 2025 03:47 AM
ADDED : ஆக 18, 2025 03:36 AM

துாய்மை பணியாளர்கள் பிரச்னையை அம்பேத்கர் பார்வையில் தான் அணுக வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்தால், அந்த தொழிலையே செய்யுங்கள் என கூறுவது போன்றதாகும்.
குப்பை அள்ளுபவனே, குப்பையை அள்ளட்டும்; சாக்கடையை சுத்தம் செய்பவனே, அதை சுத்தம் செய்யட்டும் என்ற கருத்துக்கு வலிமை சேர்ப்பதாக அமையும். இது, மரபு சார்ந்த அடிமை சிந்தனை.
எனவே, அவர்களை அரசு பணியாளர்களாக்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளில் மாற்றுக்கருத்து உள்ளது. அந்த கோரிக்கைகளை எதிர்த்து தான் பேச வேண்டும்.
வெட்டியான் தொழில் செய்பவனை அரசு ஊழியராக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி? பணி நிரந்தரம் செய்யக்கூடாது; அந்த தொழிலையே ஒழிக்க வேண்டும் என்பதே மிகச்சரியான கருத்து.
அரசு ஊழியராக்குங்கள், பென்சன் கொடுங்கள் என கூற முடியாது. பணி நிரந்தரம் செய்து, அரசு பணி என அறிவித்தால், அந்த அரசு பணிக்கு யார் வருவர்? பட்டியல் இனத்தவர் தான் வருவர். பரம்பரையாக அவர்களே வருவர். குப்பை அள்ளுபவனின் பிள்ளையே, குப்பை அள்ள வேண்டும் என கூற வேண்டுமா? அந்த தொழிலில் இருந்து அவர்களை மீட்பது தான் சமூக நீதி.
---திருமாவளவன்