sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரும் 14 - 18ம் தேதி வரை கோவையில் 'சங்கர விஜயம்'

/

வரும் 14 - 18ம் தேதி வரை கோவையில் 'சங்கர விஜயம்'

வரும் 14 - 18ம் தேதி வரை கோவையில் 'சங்கர விஜயம்'

வரும் 14 - 18ம் தேதி வரை கோவையில் 'சங்கர விஜயம்'


ADDED : பிப் 12, 2024 06:08 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,: ஸ்ரீ ஆதிசங்கரரின் உபதேசங்கள், அனைவருக்கும் சென்றடையும் நோக்கில் கோவையில் வரும், 14 முதல் 18ம் தேதி வரை, 'சங்கர விஜயம்' திருவிழா நடக்கிறது.

சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசுவாமிகள் துறவறம் பெற்று, பொன்விழா ஆண்டு நிறைவு அடைவதையொட்டி, பல்வேறு நகரங்களில் மகோத்ஸவம் நடக்கிறது.

இத்திருவிழாவை, சாரதா பீடத்தை சேர்ந்த ஜகத்குரு ஸ்ரீ விதுஷேகர பாரதீ சுவாமிகள், நவ., 8ம் தேதி, சிருங்கேரியில் துவக்கி வைத்தார்.

சங்கர விஜயம் திருவிழா, கோவை ரேஸ்கோர்ஸ், சாரதாம்பாள் கோவில் வளாகத்தில் உள்ள சாரதாலயத்தில் வரும், 14 முதல் 18ம் தேதி வரை நடக்கிறது. கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் துவக்கி வைக்கிறார்.

கோவை ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடமும், சென்னை ஸ்ரீ வித்யாதீர்த்த பவுண்டேஷனும் இணைந்து நடத்தும் இந்த வைபவத்தில், தினமும் காலை கருத்தரங்கும், மாலை சொற்பொழிவும் நடைபெறுகிறது. 'தர்மமே திருவுருவமானவர்' என்ற, புகைப்பட கண்காட்சியும் நடக்கிறது.

சங்கர விஜயம் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர், 90800 92100, 99940 73637, 97899 99160 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, 'வாட்ஸாப்' வாயிலாக பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்வது கட்டாயம் என, விழா அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us