ADDED : ஜூலை 19, 2011 05:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அருகே பள்ளிக்கூட வாசல் கதவில் 2 பூட்டுகள் போடப்பட்டதால் மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
கோடாங்கிபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான அமராவதி நடுநிலைப்பள்ளியில் 300க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் வந்தனர். ஆனால், வாசல் கதவில் இரண்டு பூட்டுகள் போடப்பட்டிருந்தன. எஸ்.ஐ., உதயகுமார் தலைமையில் போலீசார் பூட்டுகளை உடைத்து கதவை திறந்தனர். அரைமணி நேரம் ரோட்டில் காத்திருந்த மாணவர், ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். காலை 9.30 மணி முதல் வழக்கம் போல் வகுப்புகள் நடந்தன. நேற்று மாலை பள்ளி நிர்வாகம் சார்பில் வாசல் கதவுக்கு ஒரு பூட்டு போடப்பட்டது. மற்றொரு பூட்டு போட்டவர் யார், என விசாரணை நடக்கிறது.

