விலையில்லா பொருட்களை வாங்க பள்ளி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு
விலையில்லா பொருட்களை வாங்க பள்ளி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு
ADDED : ஜன 06, 2025 03:22 AM
ராமநாதபுரம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழக அரசால் வழங்கப்படும் மாணவர்களுக்கான விலையில்லா பொருட்களை வாங்க அலைக்கழிப்பு செய்வதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்களாக பாடப்புத்தகங்கள், காலணி, சீருடை, புத்தகப்பை, புவியியல் வரைபடம், வண்ண பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி உள்ளிட்டவை ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
இவை ஒவ்வொன்றையும் வெவ்வேறு கால கட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு வழங்குகிறது. பொருட்களை மொத்தமாக வரவழைத்து இருப்பு வைக்கப்பட்ட பள்ளிகளுக்கு மற்ற பள்ளி ஆசிரியர்களை அதிகாரிகள் அழைத்து வாங்கி செல்ல கூறுகின்றனர்.
மேலும் இப்பொருட்களை எடுத்து செல்வதற்கான செலவு தொகையையும் வழங்குவதில்லை. இதனால் ஆசிரியர்கள் தங்கள் கையில் இருந்து செலவிடும் நிலை உள்ளது. பள்ளி துவங்கும் போது அனைத்து விலையில்லா பொருட்களையும் வழங்கிட பள்ளிக்கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.