ADDED : ஜூன் 05, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் சார்பில், கடந்த 2022, 2023ம் ஆண்டுக்கான 'தமிழக அறிவியல் அறிஞர் விருதுகள்' 24 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
அறிவியல் துறையில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. கடந்த 2022, 2023ம் ஆண்டுகளுக்கான விருது பெற, 169 பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களில், ஆண்டுக்கு 12 பேர் என, இரண்டு ஆண்டுகளுக்கு, 24 பேர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரங்களை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் நேற்று வெளியிட்டார். விருது வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.