கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
ADDED : ஏப் 28, 2025 08:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் 190 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகளை விற்பனைக்கு கொண்டு சென்ற அம்பு ராஜா, வில்வ புவனேஸ்வரன் ஆகிய இருவர் சரக்கு வாகனத்துடன் கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம் வர்த்தகம் தெரு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 19 சாக்கு மூட்டைகளில் 190 கிலோ பதப்படுத்தப்படாத நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சரக்கு வாகனத்துடன் கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் சரக்கு வாகன ஓட்டுனர் அம்பு ராஜா மற்றும் வில்வ புவனேஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து, வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.