sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இறந்து கரை ஒதுங்கும் கடல் ஆமைகள்; கடல் வளம் அழியும் என சூழல் ஆர்வலர்கள் வேதனை!

/

இறந்து கரை ஒதுங்கும் கடல் ஆமைகள்; கடல் வளம் அழியும் என சூழல் ஆர்வலர்கள் வேதனை!

இறந்து கரை ஒதுங்கும் கடல் ஆமைகள்; கடல் வளம் அழியும் என சூழல் ஆர்வலர்கள் வேதனை!

இறந்து கரை ஒதுங்கும் கடல் ஆமைகள்; கடல் வளம் அழியும் என சூழல் ஆர்வலர்கள் வேதனை!


ADDED : ஜன 27, 2025 08:11 PM

Google News

ADDED : ஜன 27, 2025 08:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை கடற்கரையில், ஒரு மாதத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. 'சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் தான் காரணம்' என்று சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அட்டவணை 1 இனமாக பட்டியலிடப்பட்டுள்ள கடல் ஆமைகள், ஆங்கிலத்தில் ஆலிவ் ரிட்லி என்றும், தமிழில் சிற்றாமை அல்லது பங்குனி ஆமை என்றும் அழைக்கப்படுகின்றன. இவை, கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும், அவை ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டின் கடற்கரைக்கு வருகின்றன. சமீப காலமாக அவை இறந்து கரை ஒதுங்குவது அதிகரித்துள்ளது.

விலங்கு பாதுகாவலர்கள் கூறியதாவது:

மாநில அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பாதுகாப்பு முயற்சிகள் நீண்ட காலமாக ஆமை இனங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. இவ்வாறு இருந்த போதிலும் சமீபத்திய இறப்புகள் இதற்கு முன் இல்லாதவை. கிட்டத்தட்ட 5,000 ஆலிவ் ரிட்லி ஆமைகள் கடலில் இறந்திருக்கலாம். கரையொதுங்கிய ஆமைகள் மொத்த இறப்புகளில் 10 சதவீதம் மட்டும் தான்.

இறந்த ஆமைகளின் உடல்களை பகுப்பாய்வு செய்தபோது, நீரில் மூழ்குவதற்கான தெளிவான அறிகுறிகள் தெரியவந்தன. 45 நிமிடங்கள் வரை மூச்சைப் பிடித்து வைத்திருக்கக்கூடிய இந்த ஆமைகள் நீரில் மூழ்கி இறந்துவிட்டன என்பதற்கான தெளிவான அறிகுறியாக கழுத்து வீங்கியிருப்பதும், கண்கள் உரிந்து விழுந்திருப்பதும் காண முடிகிறது.

கண்காணிக்கப்படாத மீன்பிடி நடைமுறைகளால், கரையிலிருந்து 8 கி.மீ.க்கு அப்பால் மீன்பிடிக்க வேண்டிய இழுவைப் படகுகள், கடற்கரையிலிருந்து 2 முதல் 3 கி.மீ. வரை இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

கடற்பரப்பை நீண்ட நேரம் தேடிச் செல்ல வடிவமைக்கப்பட்ட இழுவை வலைகள் மற்றும் செவுள் வலைகளின் பயன்பாடு, ஆமைகளுக்கு ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவற்றால் காற்றை சுவாசிக்க முடியாமல் ஆமைகள் சிக்கி மூழ்கி இறக்கின்றன. ஆகையால் மீன்பிடி நடைமுறைகள் கண்காணிக்கப்பட வேண்டும். ஆமைகள் அழிந்தால் கடல் வளம் அழியும். எனவே, சட்ட விரோதமாக, கடற்கரை ஒட்டி மீன்பிடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விலங்கு பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us