ADDED : அக் 19, 2024 02:01 AM

விக்கிரவாண்டி: தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவை அவதுாறாக பேசிய வழக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று விக்கிரவாண்டி கோர்ட்டில் ஆஜரானார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த நேமூரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்து அவதுாறாக பேசியதாக விழுப்புரம் மாவட்ட காங்., தலைவர் ரமேஷ், கஞ்சனுார் போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு நேற்று விக்கிரவாண்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதனையொட்டி, காலை 10:35 மணிக்கு மாஜிஸ்திரேட் சத்தியநாராயணன் முன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.
அவரை விசாரித்த மாஜிஸ்திரேட் சத்தியநாராயணன், வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.