தன் கூடாரம் காலியாகும் அச்சத்தில் விஜய் மீது சீமான் பாய்ச்சல்
தன் கூடாரம் காலியாகும் அச்சத்தில் விஜய் மீது சீமான் பாய்ச்சல்
ADDED : நவ 05, 2024 06:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம் அனைவரின் மொழியையும் நம்பிக்கையும் போற்றுகின்ற மண்ணாக உள்ளது. நடிகை கஸ்துாரியின் பேச்சு வெறுப்பு அரசியலின் மையமாக உள்ளது. நடிகர் விஜயின் அரசியல் வருகையால் தனது கூடாரம் காலியாகும் என சீமானுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் நடிகர் விஜயை விமர்சித்து, கண்டதையும் பேசுகிறார். வயநாட்டில் பிரியங்கா எளிதாக வெற்றி பெறுவார். அவரின் அரசியல் வருகை மோடி, அமித் ஷாவின் வெறுப்பு அரசியலுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
நடிகர் விஜய் கொள்கைக்கும், தி.மு.க., கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் பா.ஜ., தலைவர் ராஜா பேசுகிறார். பா.ஜ., தமிழர்களுக்கு எதிரான கட்சி. தமிழகத்தில் தி.மு.க., - காங்., கூட்டணி, நீண்ட காலம் நிலையான உறவுடன் உள்ளது. அது நிலைக்கும்.
மாணிக்கம் தாகூர், காங்., - எம்.பி.,