'அமரன்' படத்திற்கு எதிர்ப்பு தியேட்டர்களுக்கு பாதுகாப்பு
'அமரன்' படத்திற்கு எதிர்ப்பு தியேட்டர்களுக்கு பாதுகாப்பு
ADDED : நவ 08, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அமரன் படத்திற்கு எதிராக, முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால், அத்திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில், முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்து உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, படத்தின் தயாரிப்பாளர் கமல் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். கமல் உருவபொம்மை எரிப்பு, தியேட்டர்கள் முற்றுகை என, போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம் அமைப்பினரின் போராட்டம் காரணமாக, தமிழகம் முழுதும், 'அமரன்' படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.