7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 'சீட்' குறிஞ்சி 'நீட்' மாணவர்கள் சாதனை
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 'சீட்' குறிஞ்சி 'நீட்' மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 17, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:நாமக்கல் குறிஞ்சி கல்வி நிறுவனங்கள், காவேட்டிப்பட்டியில் பல ஆண்டுகளாக சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான, குறிஞ்சி நீட் அகாடமி, பல மருத்துவ மாணவர்களை உருவாக்கியுள்ளது.
இதன், 'நீட்' பயிற்சி மையத்தில், பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.
அதன்படி, 2025ல் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மஹாலட்சுமி, நிவேதா, பிரவீன், பிரியங்கா, தாரணி மோனிகா, காவியஸ்ரீ, சிவரஞ்சனி, ரேணுகா ஆகியோர், தமிழக அரசின் மருத்துவ படிப்பிற்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவ படிப்பு பயிலும் வாய்ப்பை பெற்றனர்.
அந்த மாணவ, மாணவியரை, குறிஞ்சி நீட் அகாடமி தாளாளர் தங்கவேல், நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.