ADDED : ஏப் 04, 2024 05:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஏப்ரல் 04) முடிவடைந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 31வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

