ADDED : மே 22, 2025 01:48 AM
சென்னை:கல்யாண் ஜுவல்லர்ஸ் குழுமத்தை சேர்ந்த, கேண்டரே (CANDERE) ஜுவல்லர்ஸ் பிராண்ட், பாலிவுட் நடிகர் ஷாருக் கானை விளம்பரத் துாதராக அறிவித்துள்ளது.
ஷாருக் கானின் வசீகரமும், இந்திய பார்வையாளர்களுடனான, அவரின் வலுவான பிணைப்பும், இந்த பிராண்டுக்கு அவர் பொருத்தமானவர் என்பதை குறிக்கிறது.
இந்த பிராண்டின் டிஜிட்டல், தொலைக்காட்சி, விற்பனை மைய விளம்பரங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அவர் பங்கு பெறுவார். இந்த பிராண்ட், தற்கால வாடிக்கையாளர்களுடன் ஒருங்கிணைந்து, நாடு முழுதும் வளர, அவர் நியமனத்தை, மிகப்பெரிய முன்னெடுப்பாக பார்க்கிறது.
இந்த பிராண்டின் கீழ், நாடு முழுதும் 75க்கும் அதிகமான, நகைக்கடைகள் இயங்கி வருகின்றன. இணையதளம் மற்றும் நகைக்கடைகளின் வாயிலாக ஆர்டர்களை கொடுக்கலாம். நகைகளின் விலை, 10,000 ரூபாய் முதல் துவங்குகிறது.
விளம்பர துாதராக நியமிக்கப்பட்டது குறித்து ஷாருக் கான் கூறியதாவது:
காதல், நினைவுகள் ஆகியவற்றின் அடையாளத்தை, நகைகள் பிரதிபலிக்கின்றன. கல்யாண் ஜுவல்லர்ஸ் குழுமத்தின் கேண்டரே பிராண்டுடன் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இன்று மக்கள் நகைகளை எவ்வாறு அணிகின்றனர் மற்றும் பரிசளிக்கின்றனர் என்பதற்கான, புதிய கண்ணோட்டத்தை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.