'பூமர் விமன்' நிறுவனத்தின் விளம்பர துாதர் ஸ்ருதி ஹாசன்
'பூமர் விமன்' நிறுவனத்தின் விளம்பர துாதர் ஸ்ருதி ஹாசன்
ADDED : ஜன 26, 2025 01:08 AM

சென்னை: 'பூமர் விமன்' நிறுவனத்தின் விளம்பர துாதுவராக, நடிகை ஸ்ருதிஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, பூமர் பேஷன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
எங்களது ஆடை தயாரிப்புகளை, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அனைவரும் விரும்பும் வகையில் தயாரித்து வருகிறோம். எங்களது பூமர் விமன் தயாரிப்பு, இளம் பெண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெயர் மற்றும் மதிப்பை பெற்று வருகிறது.
எங்களது தயாரிப்பில் பெண்களுக்கான லெக்கின்ஸ், நைட்வேர், சிலிப்ஸ், பிரேசரிஸ், பேன்டீஸ், யோகா சார்ட்ஸ், டிராக் பேன்ட், டி- - சர்ட்ஸ், சிறுமியருக்கான பேன்டீஸ், சிலிப்ஸ், யோகா சார்ட்ஸ் மற்றும் பூமர் பேஷன் தயாரிப்புகள் உள்ளன.
ஆண்களுக்கான பனியன்கள், பிரீப்ஸ், டிரங்ஸ், சிறுவர்களுக்கான பனியன்கள், பிரீப்ஸ், டிரங்ஸ் அனைத்தும் சிறந்த தரத்தில், அனைத்து தரப்பினரின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எங்களது தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும், விற்பனையை மேம்படுத்தவும் பூமர் விமன் தயாரிப்பில், பெண்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ருதி ஹாசன் எங்களது விளம்பர துாதராக உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

