ரயில்வே பாலத்தில் பக்கவாட்டு சுவர் இடிந்தது: ரயில் போக்குவரத்து பாதிப்பு
ரயில்வே பாலத்தில் பக்கவாட்டு சுவர் இடிந்தது: ரயில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 24, 2025 10:49 PM

ஈரோடு: ஈரோட்டில் ரயில்வே பாலத்தில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த காரணத்தினால் அந்த வழியாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ஈரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சாவடிபாளையம் பகுதியில் ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் அமைந்துள்ள ரயில்வே நுழைவு மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இன்று( அக்.,24) இரவு இடிந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக கீழே யாரும் இல்லாத காரணத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. உடனடியாக அந்தப்பாலத்தின் கீழ் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வேறு பகுதியில் போலீசார் மாற்றி விட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் பிறகே இப்பாதை வழியாக ரயிலை இயக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இதனால், கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில், ஈரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

