ADDED : பிப் 13, 2024 07:03 AM

சென்னை: தென் மாநிலங்களுக்கான ஆஸ்திரேலிய துணை துாதராக சிலாய் ஜகி பொறுப்பேற்றார்.
சென்னையில் உள்ள ஆஸ்திரேலியா துணை துாதரகத்தில், துணை துாதராக இருந்த சரத் கிர்லீயின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிந்தது. புதிய துணை துாதராக சிலாய் ஜகி பொறுப்பேற்றுள்ளார். இப்பதவிக்கு வந்துள்ள ஆஸ்திரேலியாவின் முதல் முஸ்லிம் பெண் இவர்.
துணை துாதராக பதவி ஏற்றுள்ளது குறித்து, சிலாய் ஜகி கூறியதாவது: ஆஸ்திரேலியாவின் சென்னை அலுவலகத்துக்கான கான்சல் ஜெனரலாக பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி. இந்தியாவின் ஆற்றல்மிக்க தென் மாநிலங்களுடன் ஆஸ்திரேலியாவின் உறவையும், வர்த்தகத்தையும் மேம்படுத்துவதில், துணை துாதரகம் முக்கிய பங்காற்றும்.
கல்வி, ஆராய்ச்சி, துாய எரிசக்தி, மேம்பட்ட உற்பத்தி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், ஆஸ்திரேலியா - இந்தியாவுடனான வர்த்தகம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.