சார் - பதிவாளர்கள் 17 பேர் மாற்றம் பதிவுத்துறை உத்தரவு
சார் - பதிவாளர்கள் 17 பேர் மாற்றம் பதிவுத்துறை உத்தரவு
ADDED : ஜன 01, 2025 10:32 PM
சென்னை:பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 17 சார் - பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், சார் - பதிவாளர்களுக்கு, பொது மாறுதல் வழங்குவது, சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனால், சார் -பதிவாளர்கள் சொந்த காரணங்களுக்காக, விரும்பிய ஊர்களுக்கு இடமாறுதல் பெற முடியாத நிலை இருந்தது.
தற்போது அரசின் அனுமதியுடன், சொந்த காரணங்கள் அடிப்படையில் இடமாறுதல் வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன. இதன்படி ஏற்கனவே, 19 சார் - பதிவாளர்கள் மாற்றப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது, 17 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தர்மபுரி, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, 17 சார் - பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.