விதிமீறிய வாகனங்கள் பறிமுதல்: சிவகங்கை போலீஸ் நடவடிக்கை
விதிமீறிய வாகனங்கள் பறிமுதல்: சிவகங்கை போலீஸ் நடவடிக்கை
ADDED : நவ 29, 2025 12:43 AM

சிவகங்கை: மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜைக்கு விதிமீறி வாகனங்களில் வந்த 96 பேரை கைது செய்து, 46 வாகனங்களை சிவகங்கை மாவட்ட போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அக்., 27 ம் தேதி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வந்திருந்தனர். அக்., 30 அன்று பசும்பொன் தேவர் குருபூஜைக்கு சென்று வந்தனர். இதற்காக காளையார்கோவில், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், திருப்புத்துார், கீழச்சிவல்பட்டி, திருக்கோஷ்டியூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் செக்போஸ்ட் அமைத்து, விதிகளை மீறி சென்ற வாகனங்களை வீடியோ ஆதாரத்துடன் போலீசார் கண்காணித்தனர்.
வாகனங்களின் மேலே அமர்ந்து, கூச்சலிட்டு சென்றதாக 96 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் வந்த 46 வாகனங்களை பறிமுதல் செய்து, சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் வைத்துள்ளனர். பறிமுதல் செய்த வாகனங்களை நீதிமன்றம் மூலம் வாகன உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாகன டிரைவரின் லைசென்ஸ் ரத்து மற்றும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது போன்று பறிமுதல் செய்த வாகனங்களை சிவகங்கை மாவட்ட போலீசார் ஆயுதப்படை மைதானத்தில் 'DRIVE SAFE' எனும் வடிவத்தில் நிறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

