ADDED : மார் 01, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டம் வலையங்குளம் காளீஸ்வரன் 26, மேல அனுப்பானடி பாபுராஜ் 27, சேகர் 34. இவர்களிடம் 30 கிலோ கஞ்சாவை கீரைத் துறை போலீசார் 2021 ல் பறிமுதல் செய்தனர்.
காளீஸ்வரன், பாபுராஜிற்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம், சேகருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.
சிந்தாமணி ரோடு சபாரத்தினம் 34, காமராஜபுரம் திலீப் 27, அவனியாபுரம் ஹரிகரசுதன் 23. இவர்களிடம் 42 கிலோ கஞ்சாவை 2020ல் எஸ்.எஸ்.காலனி போலீசார் பறிமுதல் செய்தனர். மூன்று பேருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.

