தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பணியில் மெத்தனம் எஸ்.ஐ., ‘சஸ்பெண்ட்’

பணியில் மெத்தனம் எஸ்.ஐ., ‘சஸ்பெண்ட்’

பணியில் மெத்தனம் எஸ்.ஐ., ‘சஸ்பெண்ட்’


UPDATED : அக் 08, 2026 08:20 PM

ADDED : அக் 08, 2026 08:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 08:20 PM ADDED : அக் 08, 2026 08:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: புகாரை வாங்காமல் மெத்தனமாக செயல்பட்ட எஸ்.ஐ., தினேஷ், 38, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, கீரம்பூரைச் சேர்ந்த சுகன்யா, 35, என்பவர், 15 நாட்களுக்கு முன் மாயமானார். அவரது தந்தை மனோகரன், துறையூர் போலீசில் புகார் அளிக்க சென்றபோது, புகாரை வாங்காமல் எஸ்.ஐ., தினேஷ் இழுத்தடித்துள்ளார்.

மூன்று நாட்கள் கழித்து சுகன்யா உடல், கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். சுகன்யா காணாமல் போன புகாரை வாங்காமல் அலைக்கழித்த எஸ்.ஐ., தினேசை, சஸ்பெண்ட் செய்து, திருச்சி எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டார்.

அதேபோல், பணியில் மெத்தனமாக இருந்ததாக, துறையூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.பி., சிறப்புப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., முத்துச்செல்வம், 57, ஜீயபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us