ADDED : ஜன 09, 2026 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின், அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், தமிழகம் முழுதும், சமுதாய பணியாளர்கள் நேற்று வேலையை புறக் கணித்து, மகளிர் திட்ட அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
' ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்; மகளிர் திட்டத்தை தனித்துறையாக, அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்க ஆணை பிறக்க வேண்டும்' என்பது உட்பட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடந்தது.

