நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தொண்டாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான அம்பேத்கர் விருது பெற விரும்புவோர், முழு விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை, www.tn.gov.in/ta/forms/deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகம் அல்லது தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.