நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட, வீட்டுக்கு 3.50 லட்சம் ரூபாய் வீதம், 3,500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிற்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுவரை தமிழக அரசு, 1,051.34 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப, 860.31 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் வீடுகளும் வேகமாக கட்டப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு மேலும், 400 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

