நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், 21,000 ரூபாயில் இருந்து, 22,000 ரூபாயாகவும், அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், 11,500 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற் கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்களான, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வாரிசுகளுக்கு வழங்கப்படும், சிறப்பு ஓய்வூதியத்தை 10,500 ரூபாயில் இருந்து, 11,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.