ADDED : மார் 18, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டாவூரைச் சேர்ந்தவர் விவசாயி மோகன், 30; மனைவி சென்னம்மாள், 28. இவர்களது மகன் தீபக், 2. நேற்று முன்தினம் வீட்டின் முன்புறம் இருந்த தீபக்கை அடையாளம் தெரியாத பெண், துாக்கி சென்றார்.
இதைப்பார்த்த சென்னம்மாள், அப்பெண்ணை விரட்டி, அவரது கண்களில் மிளகாய் பொடியை துாவி, குழந்தையை மீட்டார். பின்னர் அப்பெண், அங்கிருந்து தப்பினார்.
இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவுவிசாரிக்கின்றனர்.

