ADDED : செப் 06, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், ஆபரண தங்கம் சவரன் விலை, 78,920 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு நட வடிக்கையால், பல நாடுகள் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியை தங்கமாக மாற்றி வருவது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,795 ரூபா ய்க்கும், சவரன், 78,360 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 137 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை, கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, 9,865 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 78,920 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 136 ரூபாய்க்கு விற்பனையானது.