கழுகு, குள்ளநரி உட்பட 10 உயிரினங்களுக்காக எட்டு இடங்களில் சிறப்பு மையங்கள் அமைப்பு
கழுகு, குள்ளநரி உட்பட 10 உயிரினங்களுக்காக எட்டு இடங்களில் சிறப்பு மையங்கள் அமைப்பு
ADDED : ஏப் 18, 2025 09:52 PM
சென்னை:கழுகு, இருவாச்சி பறவை, குள்ள நரி உள்ளிட்ட உயிரினங்களுக்காக, எட்டு இடங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் எட்டு வனக்கோட்டங்களில், எட்டு இடங்களில், அழிந்து வரும் உயிரினங்களுக்கான சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த உயிரினங்கள் குறித்த விபரங்களை, மாணவர்களுக்கு தெரிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒரு மையத்துக்கு ஒரு விலங்கு அல்லது பறவை என்ற அடிப்படையில், இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுஉள்ளன.
நவீன தொழில்நுட்பம் வாயிலாக, குறிப்பிட்ட சில வகை உயிரினங்கள் குறித்த காட்சி அமைப்புகள் இதில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
நான்கு கொம்பு மான், ஆற்று நீர் நாய், குள்ள நரி, சாம்பல் கூழைக்கடா, செந்தலை கழுகு, சாம்பல் நிற அணில், எகிப்து கழுகு, கரும்புலி மான், இருவாச்சி பறவை, நீலகிரி மந்தி, போன்ற உயிரினங்களுக்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இவை குறித்த உயிரியல் விபரங்களை, 'டிஜிட்டல்' முறையில் மக்கள் அறிய, இந்த மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள், இங்கு வந்து செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.