அரசு துறைகளில் தற்காலிக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை போட்டி தேர்வுகளில் கூடுதல் மார்க் த ர திட்டம்
அரசு துறைகளில் தற்காலிக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை போட்டி தேர்வுகளில் கூடுதல் மார்க் த ர திட்டம்
ADDED : நவ 09, 2025 02:23 AM
சென்னை: அரசு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அடுத்த மூன்று ஆண்டு களில் நடக்க உள்ள, குரூப் 'சி' மற்றும் குரூப் 'டி' பிரிவு தேர்வுகளில், கூடுதல் மதிப் பெண் வழங்கும் வகையில், புது திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், அரசு துறைகளில் அங்கீகரிக்கப்படாத அல்லது நிரந்தரமற்ற பணியிடங்களில் தற்காலிமாக பணிபுரிவோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் நடக்கும், குரூப் சி மற்றும் டி பிரிவு அரசு தேர்வுகளில், அவர்கள் தற்காலிமாக அரசு துறையில் பணி செய்த காலத்தின் அடிப்படையில், கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்; இது அவர்கள் நிரந்தர பணி பெறுவதற்கு, பெரிதும் உதவியாக இருக்கும்.
இதற்கு முன் வெளியான அரசாணைகளின் படி, அரசு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், நிரந்தர பணியிடங்களில் இருந்த மாற்றுத்திறனாளிகள், நேரடி ஊதிய முறைக்கு மாற்றப்பட்டனர்.
தற்போது பலர் தற்காலிக, ஒப்பந்த மற்றும் பருவகால பணியிடங்களில் இருப்பதால், அவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது.
இதைத் தொடர்ந்து, அரசு பணியாளர் தேர்வு ஆணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ சேவை தேர்வு வாரியம் ஆகியவற்றுடன் ஆலோசித்து, தற்காலிக பணியில் உள்ள மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு, அரசு தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான, குரூப் சி மற்றும் டி பிரிவு பணியாளர் ஆட்சேர்ப்பு தேர்வுகளில், இந்த கூடுதல் மதிப்பெண் விதிமுறை பின்பற்றப்படும்.
அதன்படி, 2 முதல் 10 ஆண்டு; 11 முதல் 15 ஆண்டு கள் மற்றும் 16 ஆண்டுகளுக்கு மேல் என, மூன்று பிரிவுகளின் கீழ், பணி அனுபவத்தின் அடிப்படையில், மதிப்பெண் கள் வழங்கப்படும்.
எனவே, இதற்கு முன் வெளியான அரசாணைகளுக்கு பதிலாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

