தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு
ADDED : ஆக 09, 2025 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஒவ்வொரு ஆண்டும் தேசிய கைத்தறி தினம் ஆக., 7ல் கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு, 11-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, இந்திய அஞ்சல் துறை, தொன்மையான நெசவுத் தொழிலையும், நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை நினைவுகூரும் வகையிலும், 'காருகா' என்ற படத்துடன் கூடிய சிறப்பு அஞ்சல் அட்டையை வெளியிட்டு கவுரவித்துள்ளது.
அஞ்சல் அட்டையை, மத்திய மண்டல அஞ்சலக தலைவர் நிர்மலா தேவி, தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் நேற்று வெளியிட்டார்.
இந்த சிறப்பு அஞ்சல் அட்டை, திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்திலும் வெளியிடப்பட்டது. அதில், கைகளால் நெய்யப்பட்டு, புவிசார் குறியீடு பெற்ற திருபுவனம் பட்டுப் புடவையின் ஒரு பகுதி இடம்பெற்றுஉள்ளது.