ADDED : மார் 19, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் எஸ்.எஸ்.ஐ., யாக பணிபுரிபவர் ஆதிபராசக்தி 50.
இவர் பணி தொடர்பாக நேற்று காலை டூவீலரில் சென்றார். இங்கு புது பஸ் ஸ்டாண்ட் அருகே 10:45 மணிக்கு மினி சரக்கு வாகனம் டூவீலரில் மோதியதில் ஆதிபராசக்தி கீழே விழுந்து மயங்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர். இங்குள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமனையில் சிறிய காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

