தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆசிரியர்களுக்கு மீண்டும் சிறப்பு ‘டெட்’ தேர்வு

ஆசிரியர்களுக்கு மீண்டும் சிறப்பு ‘டெட்’ தேர்வு

ஆசிரியர்களுக்கு மீண்டும் சிறப்பு ‘டெட்’ தேர்வு


UPDATED : அக் 24, 2026 12:00 AM

ADDED : அக் 23, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 12:00 AM ADDED : அக் 23, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு, ‘டெட்’ தேர்வை டிசம்பரில் நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வு எனும், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம், ‘டெட்’ தேர்வுகளை நடத்துகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், ‘டெட்’ தேர்வு தேர்ச்சி கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த ஜூலை 4, 5ம் தேதிகளில், சிறப்பு டெட் தேர்வு நடந்தது. மொத்தம் 2 லட்சத்து, 17 ஆயிரத்து 519 பேர் எழுதினர். அவர்களில், 1 லட்சத்து 8,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்; 1.09 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை.

இந்நிலையில், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நலனுக்காக, வரும் டிசம்பர் மாதம் சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கு இரண்டு முறை ‘டெட்’ தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பால், பணிபுரியும் ஆசிரியர்கள், டெட் தேர்ச்சி பெற, பள்ளிக் கல்வித் துறை முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

அதற்காக, அடுத்தடுத்து சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பு எனும் பி.எட்., – எம்.எட்., படிப்பை முடித்து, ‘டெட்’ தேர்வுக்காக காத்திருப்போர் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us