sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குமரி மற்றும் நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு 

/

குமரி மற்றும் நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு 

குமரி மற்றும் நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு 

குமரி மற்றும் நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு 


ADDED : செப் 19, 2025 07:22 PM

Google News

ADDED : செப் 19, 2025 07:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், செங்கல்பட்டில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக, ரயில் வெளியிட்ட அறிக்கை:

சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 22ம் தேதி முதல் அக்., 20ம் தேதி வரை, திங்கள் கிழமை தோறும், இரவு 11:50 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும்.

இந்த ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக, மறுநாள் பிற்பகல் 2:20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

வரும் 23ம் தேதி முதல், அக்., 21ம் தேதி வரை, ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், மாலை 3:35 மணிக்கு, கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

மற்றொரு சிறப்பு ரயில், வரும் 26, 28 மற்றும் அக்., 3, 5, 10, 12, 17, 19, 24, 26ம் தேதிகளில், மாலை 3:00 மணிக்கு செங்கல்பட்டில் புறப்பட்டு, விழுப்புரம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி வழியாக, இரவு 11:15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறுமார்க்கத்தில், அதே நாட்களில், திருநெல்வேலியில் இருந்து, அதிகாலை 4:00 மணிக்கு புறப்படும் ரயில், பகல் 1:15 மணிக்கு செங்கல்பட்டு வந்து சேரும்.






      Dinamalar
      Follow us