ADDED : ஜன 03, 2026 02:25 AM

சென்னை: தமிழகத்தில் எஸ்.ஐ. ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு, டிச., 19 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் இருந்து, 97 லட்சம் வாக் காளர்கள் நீக்கப்பட்டுள் ளனர். இதில் தகுதியுள்ள நபர்களையும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களையும், பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
முகவரி மாற்றம், இறந்தவர்கள் பெயர் நீக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக 'ஆன்லைன்' வாயிலாக மனுக்கள் பெறப்படுகின்றன.
இது மட்டுமின்றி, ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாமிற்கு, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை, வாக்காளர் பெயர் சேர்க்க கோரி, 7.17 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இன்றும், நாளையும், ஓட்டுச்சாவடி களில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

