இலங்கையில் ரூ. 11 கோடி போதைப்பொருள் பறிமுதல் 11 பேர் கைது
இலங்கையில் ரூ. 11 கோடி போதைப்பொருள் பறிமுதல் 11 பேர் கைது
ADDED : ஜன 27, 2026 05:21 AM

ராமேஸ்வரம்: இலங்கை கடலில் இரண்டு படகுகளில் கடத்தி செல்லப்பட்ட ரூ.11 கோடி மதிப்புள்ள 'ஐஸ்' எனும் போதைப் பொருட்களை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து 11 பேரை கைது செய்தனர்.
இலங்கை தென் கடலில் அந்நாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்துக்குரியதாக சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளை மடக்கி சோதனையிட்டனர். அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 112 கிலோ 'ஐஸ்' எனும் போதைப்பொருட்களை இலங்கை வீரர்கள் பறிமுதல் செய்தனர். படகுகளில் இருந்த 11 இலங்கை கடத்தல்காரர்களை கைது செய்து, கொழும்பு அழைத்து சென்று போதைப்பொருட்கள் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 11 கோடியாகும். இதனை கேரளா, தமிழக கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் இருந்து கடத்தி சென்று மர்மநபர்கள் இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இக்கடத்தலில் ஈடுபட்ட இந்திய கடத்தல்காரர்கள் யார் என மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

