ஸ்டாலின் சிறந்த மனிதர்; அவர் ஆட்சி அப்படியில்லை: நயினார் நாகேந்திரன் கருத்து
ஸ்டாலின் சிறந்த மனிதர்; அவர் ஆட்சி அப்படியில்லை: நயினார் நாகேந்திரன் கருத்து
ADDED : டிச 08, 2025 06:03 AM

சென்னை: ''ஜாதிவாரி கணக் கெடுப்பை வலியுறுத்தி, பா.ம.க., தலைவர் அன்பு மணி நடத்தும் போராட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பங்கேற்பர்,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி: முதல்வர் ஸ்டாலின் சிறந்த மனிதர்; ஆனால், அவரது ஆட்சி அப்படி இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அ வரது செயல் வருத்தம் அளிக்கிறது.
போராட்டம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தை, சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, ஓட்டு வங்கிக்காக முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்துகிறார்.
ஹிந்துக்களும், முஸ்லிம்களும், மாமன், மச்சானாக பழகி வருகிறோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, தீபம் ஏற்ற அரசு அனுமதி அளித்திருக்க வேண்டும்; மாறாக, 144 தடை விதிப்பது, நீதிமன்றத் தை அவமதிக்கும் செயல்.
அங்கு, தீபம் ஏற்றுவதால், முஸ்லிம்களுக்கு எந்தவித வருத்தமும் இல்லை. ஜாதிவாரி கணக் கெடுப்பை வலியுறுத்தி, பா.ம.க., தலைவர் அன்புமணி நடத்தும் போராட்டத்தில், பா.ஜ., சார்பில் மூத்த தலைவர்கள் பங்கேற்பர்.
சாதனையா? மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. பன்னீர்செல்வத்தின் நல்ல எண்ணம் நிறைவேற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க., ஆட்சி அமைத்ததும், குறைந்தபட்சம் 100 நாட்கள் சட்டசபை நடத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 40 நாள் கூட சட்டசபை நடத்தாத நிலையில், 'நாடு போற்றும் நல்லாட்சி' என, விளம்பர நாடகங் களை நடத்துவது தான் சாதனையா?
சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, எதிர்க்கட்சியினர் பேசுவதை இருட்டடிப்பு செய்யும் இந்த சர்வாதிகார ஆட்சி எப்படி பாகுபாடின்றி மக்களுக்கு சேவை செய்யும்?
சட்டசபையை கூட்டாத தி.மு.க., அரசை, மீண்டும் ஒருமுறை சட்டசபைக்கு தமிழக மக்கள் அனுப்ப மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

