ADDED : அக் 04, 2025 08:09 AM

ராமநாதபுரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ளார். தந்தை செய்த தவறை மறைத்து விட்டு, மகன் தற்போது ராமநாதபுரம் சென்று, மீனவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். காங்., - தி.மு.க., இரு கட்சிகளும் செய்துள்ள துரோகத்திற்கு, தமிழக மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்றும் காங்., உடன் கூட்டணி வைத்து குலாவி கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு, மீனவர்களின் நலன் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. கச்சத்தீவை மீட்கவும், இழந்த தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும் பா.ஜ., அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்கும். கரூரில் அப்பாவி மக்கள் பலியான விவகாரத்திலும், பா.ஜ.,வை கேள்வி கேட்க, முதல்வருக்கு தார்மீக உரிமை இல்லை. சொந்த மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு முதல்வர், மணிப்பூர் பிரச்னை பற்றி பேசுவது வேடிக்கை.
- எல்.முருகன், மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,