ADDED : பிப் 16, 2025 07:35 AM
வரும், 2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் (non-fossil fuel) இருந்து 500 GW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த முயற்சியின் அடிப்படையில், ஐந்தாண்டில், இந்திய எனர்ஜி ஸ்டோரேஜ் மார்க்கெட் 1,82,000 கோடி ரூபாய்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுத்தமான எரிபொருள் மாற்றத்தை ஊக்குவிக்க உதவும் விதமாக, ஜெய்ப்பூரைச் சேர்ந்த நண்பர்களான மஹி சிங் மற்றும் அக்ஷய் ஜெயின் ஆகியோர் 'கான்க்ரி' (Cancrie) என்ற தங்கள் சொந்த ஆற்றல் சேமிப்பு 'ஸ்டார்ட் அப்' உருவாக்கி உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் கூறியுள்ளபடி, 2050ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை (Net Zero Emissions by 2050) அடைய உலகம் முயற்சிக்கும் போது, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் நிலையான இது போன்ற ஆற்றல் மாற்றுகள் இந்த இலக்கை அடைய உதவும்.
இன்று நிறுவப்பட்ட கிரிட்- அளவிலான பேட்டரி சேமிப்புத் திறன் 2030க்குள் 44 மடங்கு விரிவாக்கப்பட்டு 680 GW ஆக வேண்டும். இதுதவிர, இது ஆண்டுக்கு 80 GWக்கும் அதிகமாக வளர வேண்டும் என்று இன்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி அறிக்கை கூறுகிறது.
'கான்க்ரி' (Cancrie) உலகை மேலும் நிலையானதாக மாற்றும் வகையில் சிறந்த எனர்ஜி ஸ்டோரேஜ் சேமிப்புத் தீர்வுகளை உருவாக்கி வருகிறது. காப்புரிமை பெற்ற நானோ மெட்டீரியல்கள் மூலம், 'கான்க்ரி' தற்போதைய பேட்டரி மற்றும் கேபாசிட்டர் தொழில்நுட்பத்தை, 125 சதவீதம் வரை அதிக திறனுடையதாக மாற்றுகிறது. இது, 75 சதவீதம் குறைவான எனர்ஜியை பயன்படுத்துகிறது.
செயல்பாடு
இந்த ஸ்டார்ட்அப், பல்வேறு வகையான கழிவுகளை மறுசுழற்சிசெய்து தயாரிக்கப்பட்ட நானோகார்பன்களை தற்போதைய பேட்டரிகளில் ஒரு கூறாக சேர்ப்பதன் வாயிலாக, அவற்றின் செயல்திறனை அதிகரிக்கிறது. பேட்டரிக்குகாப்புரிமையும் பெற்றுள்ளனர். இவை, 12 முதல் 15 சதவீதம் வரை அதிக வாட்-மணி (Wh) செயல்திறன் மற்றும் குறைந்த மின்சார நுகர்வு கொண்டவை.
'கான்க்ரி' கார்பன்கள் ஒரு காப்புரிமை செயல்முறையால் உருவாக்கப்பட்ட மிகுந்த தரமான கார்பன்கள். இவை லெட்-ஆசிட் பேட்டரிகள், லி-அயன் பேட்டரிகள், நா-அயன் பேட்டரிகள், ரெடாக்ஸ் ப்ளோ பேட்டரிகள் மற்றும் சூப்பர்கேபாசிட்டர்கள் போன்ற பல்வேறு பேட்டரி வேதியியல்வகைகளில் சிறந்த செயல்திறனை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச செயல்திறன்
'கான்க்ரி' இந்த பேட்டரிகளை தொழில்துறை அளவில் மூன்றாம் தரப்பு (third party) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் உருவாக்கி சோதனை செய்துள்ளது. இவர்களின் பேட்டரிகளின் ஆற்றல் திறனை 40 சதவீதம், வாழ்க்கை சுழற்சியை குறைந்தது, 25 சதவீதம், ஆற்றல் அடர்த்தியை, 20 சதவீதம் அதிகரிக்கிறது. இறுதி பயனர்களுக்கு, அதாவது ஒரு மின் ரிக் ஷா ஓட்டுநர் கூடுதல் வருமானம் ஈட்டலாம். இன்வெர்டர் பேட்டரிகள் கூடுதல் காப்பு நேரத்தை வழங்கும் மற்றும் சோலார் பண்ணையின் வாழ்நாள் செலவு சேமிப்பு தோராயமாக 20 சதவீதம் குறையும். இணையதளம்: www.cancrie.co. மொபைல் போன்: 8287695157
சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com. மொபைல் போன்: 9820451259. இணையதளம்: www.startupandbusinessnews.com