sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாதுகாப்பு காப்பீட்டுக்கான அணுகலை மேம்படுத்தும் 'ஸ்டார்ட் அப்'

/

பாதுகாப்பு காப்பீட்டுக்கான அணுகலை மேம்படுத்தும் 'ஸ்டார்ட் அப்'

பாதுகாப்பு காப்பீட்டுக்கான அணுகலை மேம்படுத்தும் 'ஸ்டார்ட் அப்'

பாதுகாப்பு காப்பீட்டுக்கான அணுகலை மேம்படுத்தும் 'ஸ்டார்ட் அப்'


ADDED : மார் 10, 2024 02:35 AM

Google News

ADDED : மார் 10, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் நாட்டில் ஏறத்தாழ, 90 கோடி பேர் ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லாமல் இருக்கின்றனர். பல நாடுகளில் குரூப் இன்சூரன்ஸ் எடுப்பதன் வாயிலாக, சதவீதம் கூடியிருக்கிறது. இந்தியாவும் இதனை பின்பற்றினால், ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பவர்கள் சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதுதவிர, குரூப் இன்சூரன்ஸை விநியோகிப்பதற்கான சரியான தொழில்நுட்பங்களை கொண்டு முழு இன்சூரன்ஸ் சூழலையும் செயல்படுத்த ஒரு ஸ்டார்ட் அப் முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த ஸ்டார்ட் அப் AI, ML மற்றும் பிக்டேட்டா போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் மற்றும் இன்சூரன்ஸ் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

இன்சூரன்ஸ் விநியோகஸ்தர்களுக்காக வடிவமைக்கப்பட்ட Infrastructure As A Service (IaaS) சாப்ட்வேரை BharatSure என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி வழங்குகிறது. உரிமம் பெற்ற இன்சூரன்ஸ் புரோக்கர்கள், ஏஜென்ட்கள், வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த கட்டண சேவை 'சாப்ட்வேரை'ங வழங்குகிறது. இதனால், குரூப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த்கேர் தயாரிப்புகளை விநியோகிக்க 'பாரத்சூர் ஸ்டார்ட் அப்' அவர்களுக்கு உதவுகிறது.

வாடிக்கையாளருக்கு என்ன பயன்


Bharatsure-ன் பிளக் -அண்ட் -ப்ளே API suite மூலம், embedded இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த்கேர் சொலுசன்ஸ் பல்வேறு third party paltforms உள்ள வாடிக்கையாளர்களுக்கு எளிதாக அணுகக்கூடியதாக உள்ளது. பாரத்சூர் API integrations பல முன்னணி காப்பீட்டாளர்கள் மற்றும் TPA-க்களுடன் இணைந்திருக்கிறது.

சேவை மற்றும் தயாரிப்பு உள்கட்டமைப்பை உள்ளடக்கிய full stack தொழில்நுட்ப தீர்வை வழங்குவதன் வாயிலாக, விநியோகஸ்தர்கள் காப்பீட்டை விற்பனை செய்வதில் முழுமையாக கவனம் செலுத்த இந்த ஸ்டார்ட் அப் வழிவகை செய்கிறது.

இதனால், கூடுதல் வாடிக்கையாளர்களை பெற முடிவதால் ஏஜென்ட்களுக்கு அதிக வருமானம் கிடைக்க வழி செய்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய பாலிஸி சம்பந்தப்பட்ட முழு தகவல்களையும் யாரையும் அழைக்க வேண்டியதில்லை. இணையத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.

இந்நிறுவனம், 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. தற்போது, 1.5 லட்சம் பயனர்களை கொண்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டில், ஒரு கோடி பயனர்களை அடைய முயற்சி செய்து வருகிறது.

கூடுதல் தகவல்களுக்கு, www.bharatsure.com



விவரங்களுக்கு

இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com,

அலைபேசி: 98204 51259.

இணையதளம்: www.startupandbusinessnews.com

- சேதுராமன் சாத்தப்பன் -






      Dinamalar
      Follow us