'மாநில கல்விக்கொள்கையால் உயர்கல்வி தரம் பாதிக்கப்படும்'
'மாநில கல்விக்கொள்கையால் உயர்கல்வி தரம் பாதிக்கப்படும்'
ADDED : ஆக 09, 2025 01:30 AM

கோவை: தமிழக அரசின் மாநில கல்வி கொள்கை குறித்து, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்ட அறிக்கை:
ஜே.இ.இ.,நீட் போன்ற தேசிய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, தமிழக மாணவர்களை தயார்படுத்தும் நோக்கத்துடன், பிளஸ் 1 பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே, போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்களின் செயல்திறன் கணிசமாக மேம்பட்டது.
இந்நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டால், பெரும்பாலான பள்ளிகள் நேரடியாக பிளஸ் 2 வகுப்பு பாடங்களை கற்பிக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம், பொறியியல் மற்றும் பிற பட்டப்படிப்பு சேர்க்கைகள், பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன.
பிளஸ் 1 பொதுத் தேர்வை நீக்குவது நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் வாய்ப்புகளை பாதிப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள தமிழக உயர்கல்வி தரத்தையும், கடுமையாக பாதிக்கும். இவ்வாறு, பாலகுருசாமி கூறியுள்ளார்.