UPDATED : அக் 23, 2026 07:17 PM
ADDED : அக் 23, 2026 07:14 PM
சென்னை: ‘பள்ளிகள் ஜாதி வெறிக்கான களமாக்கப்படுவதை, அரசு உடனே தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கோவை பள்ளியில் ஏற்பட்ட ஜாதிய பாகுபாட்டினால், 15 வயதுடைய ஒதுக்கப்பட்ட சமூக மாணவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யாத டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். அந்த பள்ளியில், மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், ஜாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார்.
இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இச்சூழலில், கட்சிகள், முற்போக்கு அமைப்புகள், மாணவனின் பெற்றோர், உறவினர்களின் போராட்டத்துக்கு பின், வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். பள்ளிகள் ஜாதிவெறிக்கான களமாக்கப்படுவதை, அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
