உள்ளடக்கத்திற்கு செல்ல
இந்தோனேஷியா காற்று மாசு தடுக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்
இந்தோனேஷியா காற்று மாசு தடுக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்
UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 09:36 PM
அ நிறம் | அளவு
ஜகார்த்தா: தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், கடும் வறட்சி மற்றும் 'எல் நினோ' தாக்கத்தால் சுமத்ரா, போர்னியோ ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ பரவியுள்ளது.
19 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்புகள் எரிந்து சாம்பலாகி உள்ளன. இதனால், இந்தோனேஷியாவின் பல பகுதிகளை அடர்ந்த நச்சு புகை சூழ்ந்துள்ளது. 3.33 லட்சத்துக்கும் அதிகமானோர் சுவாச நோயால் பாதிக் கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் மந்தமாக நடப்பதாகக் கூறி, அரசை கண்டித்து, ஜகார்த்தா, பண்டுங், பெக்கான்பாரு உள்ளிட்ட நகரங்களில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
