தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ உதவித்தொகையுடன் சுவடியியல் படிப்பு

உதவித்தொகையுடன் சுவடியியல் படிப்பு

உதவித்தொகையுடன் சுவடியியல் படிப்பு


ADDED : மார் 15, 2025 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை தரமணியில் உள்ள, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம் செயல்படுகிறது.

இங்கு ஓராண்டு சுவடியியல் பட்டயப்படிப்பு, வாரத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படுகிறது. இதில், சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள், www.ulakaththamizh.in என்ற இணையதளத்தின் வாயிலாக, ஏப்ரல், 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு உண்டு.

சிறந்த பத்து மாணவர்களுக்கு, மாதந்தோறும் 3,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணிலோ, 96000 21709 என்ற மொபைல் போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us