ADDED : ஏப் 03, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின் நிதி குறித்த தணிக்கை அறிக்கை, நேற்று கவர்னரிடம் அளிக்கப்பட்டது.
இந்திய அரசியல் சட்டப்பிரிவு, தமிழக அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கை, கவர்னரிடம் அளிக்க வகை செய்கிறது. இந்த அறிக்கை, சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.
அதன்படி, 2023 மார்ச் 31ல் முடிவடைந்த நிதியாண்டிற்கான, தமிழக அரசின் நிதி குறித்த தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை, சட்டசபையில் தாக்கல் செய்ய, நேற்று கவர்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

