ADDED : மார் 07, 2024 10:42 AM
சென்னை:பிரபல நடிகர் அஜித், உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் அஜித்குமார், 52. இவர், துணிவு படத்தை தொடர்ந்து, மகிழ் திருமேனி இயக்கத்தில், விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு, அசர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது.
மகனின் பிறந்த நாளுக்காக சென்னை வந்த அஜித், குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடினார்.
மீண்டும் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்லவிருந்த நிலையில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு குறிப்பிட்ட சில உடல்நிலை பாதிப்புக்கான மேம்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினி உள்ளிட்டோர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, அஜித்குமாரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளனர்.
தொடர் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் அஜித், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

