UPDATED : அக் 21, 2026 12:37 AM
ADDED : அக் 21, 2026 12:34 AM

ராசிபுரம்: பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூர், மலையாளபட்டியை சேர்ந்தவர் நடராஜன், 46. நார்வே நாட்டில் கப்பல் இன்ஜினியராக பணிபுரிகிறார். ஊருக்கு, 15 நாள் விடுமுறையில் வந்தவர், மாமனார் வீடான நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், சந்திரசேகரபுரம், ஓணாங்கரடுவைச் சேர்ந்த துரைசாமி, 82, வீட்டுக்கு சென்றார்.
அவரின் நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, தோட்டத்தில் வேலை செய்யும், புதுச்சத்திரத்தை சேர்ந்த மாரிமுத்து, 46, என்பவருடன் விலங்கு வேட்டையாட, நேற்று முன்தினம் இரவு சென்றார்.
ரோந்து பணியில் இருந்த ராசிபுரம் போலீசார், டூ – வீலரில் வந்த இருவரையும் நிறுத்தி விசாரித்த, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்து, உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த துரைசாமி மீது, வழக்கு பதிந்தனர்.
