ADDED : ஆக 28, 2026 11:17 PM

ஐமேக்ஸ் தியேட்டரில் 'மண்டாடி'
சூ ரி நாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' படம், செப்., 10ம் தேதி இந்தியாவில் ஐமேக்ஸ் தரத்திலும் வெளியாகிறது. ஆர்.எஸ். இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.
பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் தமிழகத்தில் கடல்சார் சமூக மற்றும் கலாசாரத்தை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்ஷன் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறுகையில், ''மண்டாடி படத்தை மிகப்பெரிய திரையில் பார்க்கும் வகையிலான ஒரு பிரமாண்டமான சினிமா அனுபவமாகவே உருவாக்க நினைத்தோம்.
''கடலின் இயற்கையான வேகம் மற்றும் பாய்மரப் படகு காட்சிகளின் பிரமாண்டம் ஆகியவற்றால் ஐமேக்ஸ் வெளியீட்டை தேர்வு செய்வதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.
''எங்கள் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கடின உழைப்புக்கு உரிய மரியாதையை வழங்கும் வகையில், ரசிகர்களுக்கு ஒரு ஆழமான திரையரங்க அனுபவத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்,'' என்றார்.
