பிப்.7ல் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை
பிப்.7ல் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை
ADDED : ஜன 30, 2024 12:38 AM
ராமநாதபுரம்: பிப்.,7ல் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைதுவங்க வேண்டும் என ஜன.,9ல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து பாதிக்காத வகையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. அதன்பிறகு அரசு தொழிற்சங்க கூட்டமைப்புகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் அரசு தரப்பில் பிப்.7க்கு பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஓய்வு பெற்றோர் அமைப்பின் மண்டல செயலாளர் மணிக்கண்ணு கூறுகையில், அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று (ஜன.,30) அனைத்து மண்டல அலுவலகங்களிலும் வாயில்கூட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலைப்படி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து கழகங்கள் சார்பில் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பிப்.,6ல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.அதில் ஏற்படும் முடிவுக்கேற்ப பிப்.,7ல் அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதில் சுமூக தீர்வு ஏற்பட வேண்டும் என்றார்.