முட்டாள்களின் முகவரியாக தமிழகம் * அன்புமணிக்கு ராஜா கண்டனம்
முட்டாள்களின் முகவரியாக தமிழகம் * அன்புமணிக்கு ராஜா கண்டனம்
ADDED : ஏப் 02, 2025 09:47 PM
சென்னை:தமிழகத்தில் ஆலை அமைக்க திட்டமிட்டிருந்த பி.ஒய்.டி., கார் தயாரிப்பு நிறுவனம், தெலுங்கானா மாநிலத்திற்கு சென்று விட்டதாகவும், அந்த முதலீட்டை தமிழகம் இழந்து விட்டதாகவும், சமீபத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா அளித்த பேட்டி:
தெலுங்கானாவில் ஆலை அமைக்கவில்லை என, பி.ஒய்.டி., நிறுவனமே தெரிவித்து விட்டது. எந்த ஒரு முதலீடும் தமிழகத்தில் இருந்து வெளியே செல்ல வாய்ப்பில்லை. இந்திய அளவில் முதலீட்டாளர்கள் முதலில் வரும் இடம் தமிழகம் தான். இங்கு தான், அனைத்து உள்கட்டமைப்புகளும், அரசின் முழு ஆதரவும் உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் செய்திகளை பரப்புவது, கீழ்த்தரமான செயல் இந்தியாவில் வரும் முதலீடுகள் அனைத்தும் தமிழகத்திற்கு வரும் என்றில்லை. பொய் செய்திகளை பரப்பி, வரக்கூடிய முதலீடுகளை திசை திருப்பும் வேலையை செய்யக்கூடாது.
தொடர்ந்து, இதேபோல் பேசி கொண்டே இருப்பதை பார்த்தால், தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை, வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்ல ஆசைப்படுகின்றனரோ என்று நினைக்கிறேன். முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

