ADDED : ஆக 23, 2025 01:54 AM
சென்னை:மத்திய அரசு, ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை குறைக்கும் வகையில், சீர்திருத்தங்களை மேற்கொள்ள இருப்பதாகஅறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 'ஜி.எஸ்.டி., வரி விகித குறைப்பு மற்றும் இழப்பீட்டு மேல் வரியை நீக்குவது, மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்' என, தெரிவித்துள்ளார்.
இதற்கு, பதிலளித்து நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை:
இதுநாள் வரை, ஜி.எஸ்.டி., வரி அதிகமாகஉள்ளது என்று எதிர்த்தனர். அப்போதும், அரசுக்குவருவாய் இழப்பு என்றனர்.
தற்போது, ஜி.எஸ்.டி., வரி குறைப்பால், அரசுக்கு வருவாய் இழப்பு என்கின்றனர்.
ஜி.எஸ்.டி.,யால் வணிகம் பெருகியது; வருவாய் அதிகரித்தது என்பதே உண்மை. தற்போது மத்திய அரசு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வருகிறது. அதை குறை சொல்கின்றனர்.
மத்திய அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே, ஏதேதோ பேசுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.